ஏப்ரல் 14க்குப் பிறகு ரயில் டிக்கேட் முன்பதிவு செய்யலாம்…?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மீண்டும் தொடங்கியுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் உள்ள காலத்திற்கு அனைத்து பயணிகள் ரயில்கள், விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் அந்தக் காலகட்டத்திற்குரிய முன்பதிவு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

120 நாட்கள் என்கிற கால வரம்பிற்கு உட்பட்டு ஏப்ரல் 14-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு பிந்தைய நாட்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். ரயில் பயணச்சீட்டு கவுண்டர்கள், முன்பதிவு கவுண்டர்கள் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.

 

ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிந்தைய காலத்திற்கான முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவில்லை என ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.


Leave a Reply