கொரோனா புள்ளிவிவரங்களை சீனா மறைக்கிறது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பாதிப்பு புள்ளிவிவரங்களை சீனா மறைக்கிறது என்று அமெரிக்க அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரொனா வைரஸ் அதிகரித்து வருகிறது.

 

இதனிடையே கொரொனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உலக நாடுகளின் எண்ணிக்கை 20 சதவீதத்திற்கும் குறைவாக வெளியிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரொனா வைரஸ் பாதிப்பு புள்ளி விவரங்களை சீனா மறைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.

 

உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி பேசிய அவர், தான் ஒன்றும் சீனாவின் கணக்காளர் இல்லை என்றும் சீனா வெளியிடும் புள்ளி விவரங்கள் துல்லியமானவையா ? இல்லையா? என்பது தமக்கு எப்படி தெரியும் எனவும் கேள்வி எழுப்பினார்.


Leave a Reply