--- --:--:-- --

தொழிலாளர்களின் பாதத்தை வணங்கி பாதபூஜை செய்த முதலாளி!

7

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிறுவனத்தின் உரிமையாளர் அவருடைய தொழிலாளர்களை கடவுளாக நினைத்து பாதபூஜை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பட்டுக்கோட்டையில் சமையல் எரிவாயு சிலிண்டரை வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் சேர்த்து கொண்டிருக்கின்ற நிறுவன ஊழியர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக அந்த நிறுவனத்தின் உரிமையாளரை அவர்களுடைய பாதங்களை மஞ்சள் நீரால் கழுவி, சந்தனம், குங்குமம் இட்டு பூ போட்டு அவர்களின் பாதத்தை தொட்டு வணங்கி நன்றி செலுத்தினார்.

 

முன்னதாக சமையல் எரிவாயு சிலிண்டரை ஏற்றி செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon