இந்தியாவுக்கு ரூ100 கோடி அளவிற்கு நிவாரண உதவி அறிவித்த டிக் டாக்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பிலான 4 லட்சம் கோரொனா பாதுகாப்பு உடைகளை டிக்டாக் செயலி நன்கொடையாக அளித்துள்ளது. வீடியோக்களை பகிரும் தளமான டிக் டாக் செயலுக்கு இந்தியாவில் சுமார் 30 கோடி பேர் பயனாளர்கள் உள்ளனர்.

 

இந்த நிலையில் இந்தியாவில் கொரொனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கொரொனா பணியில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் பயன்படுத்தும் வகையில் பாதுகாப்பு உடைகளை 4 லட்சம் எண்ணிக்கையில் டிக்டாக் அளித்துள்ளது.

 

அந்த நான்கு லட்சம் உடைகளில் 20 ஆயிரத்து 675 உடைகள் இந்தியாவை வந்தடைந்தன. மேலும் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 375 உடைகள் சனிக்கிழமை அதிகாலையிலும் எஞ்சிய இரண்டு லட்சம் உடைகள் அதற்கு அடுத்து வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக வந்தடையும் என கூறப்பட்டுள்ளது.


Leave a Reply