“இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம்..!” இன்றும் 75 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்றும் 75 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இந்தியாவிலேயே வைரஸ் பாதிப்பில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனாை வைரஸ் பரவல் எண்ணிக்கை கடந்த 4 நாட்களாக விறுவிறுவென உயர்ந்து வருகிறது. இன்று காலை பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்த நிலையில் மேலும் 234 பேருக்கு உறுதி செய்யப்பட்டு 2295 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும் 66 ஆக அதிகரித்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தபடியாக தெலுங்கானாவில் 9 பேரும், ம.பி.யில் 8 பேரும், குஜராத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

 

தமிழகத்திலும் இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 74 பேர் டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 30-ந் தேதி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆக இருந்த நிலையில் அன்று மேலும் 17 பேருக்கு தொற்று உறுதியாகி 67 ஆக உயர்ந்தது.

 

31-ந் தேதி 57 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 124 ஆக அதிகரித்த நிலையில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு 234 ஆக எண்ணிக்கை கிடு கிடுவென உயர்ந்தது. இந்நிலையில் இன்றும் 75 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் 319 ஆக உயர்ந்து, இந்தியாவில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 309 பேரில் 6 பேர் குணமான நிலையில், மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 302 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரானா வைரஸ் பாதிப்பில் தமிழகத்தை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் மகாராஷ்டிரா (284), கேரளா (258) ஆகிய மாநிலங்கள் உள்ளன.


Leave a Reply