மாஸ்க் அனைவரும் அணிய அவசியமா?
கொரொனாவை தடுப்பதில் மாஸ்க் என சுருங்க அழைக்கப்படும் பல்வேறு வகையான முகமூடிக்கு முக்கிய பங்கு உண்டா இல்லையா என வாதப்பிரதிவாதங்கள் பன்னாட்டளவில் தொடர்ந்து கொண்டிருக்க சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தற்காப்பு நடவடிக்கைகளாக முகமூடிகளின் பயன்பாடு அதிகமாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறியுள்ளனர்.
நுண்கிருமிகளை தடுக்கவல்ல என்95 விலை அதிகமாக உள்ளதால் அதை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைவுதான். ஆனால் அதே வேளையில் சாதாரண மற்றும் மூன்றடுக்கு முகமூடிகளின் பயன்பாடு ஆசிய நாடுகளில் பரவலாக காணப்படுகிறது.
இதன்மூலம் கொரொனாவை தடுக்க முடிகிறதோ இல்லையோ சார்ஸ் போன்ற இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பரப்பும் கிருமிகளில் இருந்து தப்பிக்க உதவிகரமாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர் . கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அண்மை நாட்கள் வரையில் கொரொனாவில் இருந்து தப்பிக்க மக்கள் முகமூடி அணிய தேவையில்லை என சொல்லி வந்தார்.
ஆனால் அதே வேளையில் தற்போது அமெரிக்காவில் குவித்து வரும் நிலையில் முக கவசம் அவசியமா என்ற கேள்வி மீண்டும் துளிர்விடும் நிலையில் அதற்கான பதில் உறுதியாக தகவலை பெறவில்லை என மழுப்பலாக கூறுகிறார்.






