--- --:--:-- --

“மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற யாருக்கும் கொரோனா தொற்று இல்லை..!” வீண் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை..! ஈஷா யோகா மையம் காட்டமான அறிக்கை!!

dgs

ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி விழாவில் பங்கேற்ற ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்றும் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஈஷா யோகா மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் இப்போது பெரும் பீதியைக் கிளப்பி வருகிறது. டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த மாநாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோ ரை கண்டறியும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற 515 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 616 பேரை அடையாளம் கண்டறிவதில் சிக்கலாகியுள்ளது. இதனால் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன் வந்து பரிசோதனை செய்து கொள்ள தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

இதற்கிடையே கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் பரவக் காரணமே டெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பங்கேற்றவர்களான் தான் என்பது போல அவதூறு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதல் உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், இந்தியாவில் இஸ்லாமியர்கள் மீது பழி சுமத்த திட்டமிட்டு அவதூறு கிளப்பி விடப்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் கோவை அருகே ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிரமாண்டமாக நடைபெற்றது. விடிய, விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்ளிட்ட பிரபலங்களுடன் பல்லாயிரம் பேர் பங்கேற்றனர். இதில் வெளிநாட்டு பக்தர்களும் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், இந்த விழாவில் பங்கேற்றவர்களிடம் கொரோணா சோதனை நடத்தப்படாதது ஏன்? என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக ஈஷா யோகா மையம் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த பிப்ரவரியில் மகா சிவராத்திரி விழா நடைபெற்ற போது மாநில சுகாதார அதிகாரிகள் ஈஷா மையத்துக்கு வந்து மருத்துவ சோதனைகளை நடத்தினர். தற்போது வரை மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்ற யாருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை. எனவே, வீண் வதந்தி பரப்புவோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈஷா யோகா மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon