டெல்லி மாநாட்டில் பங்கேற்று புதுச்சேரி திரும்பிய இருவருக்கு கொரோனா…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த புதுச்சேரியை சேர்ந்த இருவருக்கு கொரொனாத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்றவர்களுக்கு கொரொனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

அம்மாநாட்டில் புதுச்சேரியை சேர்ந்த மூவர், காரைக்காலை சேர்ந்த இருவர், ஏனாம் பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 6 பேர் பங்கேற்று இருப்பது தெரியவந்தது. அதில் புதுச்சேரியை சேர்ந்த இரு நபர்களுக்கு கொரொனா தொற்றிருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மற்ற நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மன பாதிப்பு உள்ளதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்ட 65 வயது மூதாட்டி சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply