--- --:--:-- --

ஸ்பைஸ் ஜெட் விமானிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது!

4

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானி ஒருவருக்கு கொரொனா தொற்றுநோய் உறுதியாகியுள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தை சென்னையில் இருந்து டெல்லிக்கு கடந்த 21ஆம் தேதி ஓட்டிய விமானிக்கு தற்போது கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

இதை தொடர்ந்து அவருடன் விமானத்தில் பயணித்த ஊழியர்கள் உள்ளிட்ட 14 நாட்கள் சுய தனிமையில் இருக்கும் படி அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

 

இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய அரசின் வழிகாட்டுதல்களை தங்களது நிறுவனம் தீவிரமாக பின்பற்றுவதாக பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு தங்களது நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon