--- --:--:-- --

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை!

3

சென்னையில் எந்தப் பகுதியிலும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.

 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், போரூர், ஆலந்தூர் மற்றும் கோட்டூர்புரம் ஆகிய இடங்கள் கண்காணிப்பில் உள்ளனர். சென்னையில் 9 இடங்களில் கொரொனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

சுகாதார தொற்றால் பாதித்த வீடுகள் சுற்றி சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் எந்த பகுதியிலும் மிரட்டல் எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் தைரியமாக இருக்க வேண்டும் பீதி அடையக் கூடாது எனவும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon