நேரக் கட்டுப்பாட்டால் வீணாகி தரையில் ஊற்றப்படும் பால்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


சென்னையில் உள்ள மாட்டுப் பண்ணைகளில் கொள்முதல் செய்யப்படும் பாலை விற்க முடியாததால் மீதி பாலை வீணாக தரையில் ஊற்றி வருவதாக பால் விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 

சென்னையில் சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய இடங்களில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பசுமாடுகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். இவர்களிடம் ஒரு நாளைக்கு மொத்தம் 20,000 லிட்டர் பாலை கொள்முதல் செய்யும் தனியார் பால் விற்பனையாளர்கள் தேனீர் கடைகள், உணவகங்கள் பொதுமக்களுக்கு விற்று வந்தனர்.

 

ஊரடங்கு கடைகளுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இப்போது பாலை முழுவதும் விற்க முடியவில்லை என்றும், அதனால் மீதி பாலை வீணாக தரையில் ஊற்றுவதாகவும் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் தங்களுக்கு நட்டமோ, வாழ்வாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக பால் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply