டெல்லி ஊரடங்கால் டெல்லியில் காற்றின்தரம் உயர்ந்தது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பெருநகரங்களில் காற்றின் தூய்மை அதிகரித்துள்ளது. கொரொனாவை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

 

இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய வாகனங்களை தவிர பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்படவில்லை. இதனால் தற்போது காற்றின் தரம் மதிப்பீட்டில் திருப்திகரமான அளவை எட்டியுள்ளது.

 

மத்திய காற்று மாசு தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மும்பை, அகமதாபாத், புனே ஆகிய நகரங்களில் காற்றின் தரம் திருப்திகரமான அளவில் இருப்பதாக தெரிவித்து சென்னை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் காற்றின் தரம் சிறந்த அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.


Leave a Reply