ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் திருமணங்கள் உறவினர்களின்றி வெறிச்சோடிய திருமணம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


ஊரடங்கு உத்தரவால் தமிழகத்தில் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் உறவினர்களின் வருகை இன்றி வெறிச்சோடியது. புதுக்கோட்டை மாவட்டம் காரைக்குடியில் பத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் குறைந்த அளவிலான உறவினர்களுடன் எளிமையாக பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

 

மாங்கோட்டை கிராமத்தில் கார்த்திக், சூர்யா ஆகியோருக்கு ஆலங்குடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கோலாகலமாக திருமணம் நடைபெறவிருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் மாப்பிள்ளை வீட்டில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்ற வீட்டை சுற்றிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அனைவரும் கை கழுவிய பின்னரே மணமக்கள் அருகில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று மணமக்கள் உறவினர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து படி திருமணத்தில் பங்கேற்றனர். ஊரடங்கு உத்தரவால் மேலும் 15க்கும் மேற்பட்ட திருமண நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகர் கோவில் பகுதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட திருமணம் எளிய முறையில் நடைபெற்றது .

 

திருமணத்தில் 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்தவர்கள் கைகளில் மஞ்சள் நீரால் கழுவிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர். கொரொனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கி இயல்பு நிலை திரும்பிய பிறகு உறவினர்கள் நண்பர்களை அழைத்து பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடத்த உள்ளதாக திருமண வீட்டார் தெரிவித்தனர்.


Leave a Reply