கொரோனா நுரையீரலை எவ்வாறு பாதிக்கிறது?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரசால் நுரையீரல் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பது குறித்த வீடியோ காட்சியை மருத்துவர் வெளியிட்டுள்ளார்.59 வயதான ஆண்களுக்கு கொரொனா அறிகுறி துவங்குவதற்கு சில நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட இந்த காட்சியை வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவர் வெளியிட்டுள்ளார்.

 

அதிக ரத்த அழுத்தம் கொண்ட அந்த நோயாளிக்கு நுரையீரலில் தொற்று பாதித்ததால் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுவாச கருவியின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காட்சியில் மஞ்சளாக தெரியும் பகுதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் இவ்வாறு பாதிக்கப்பட்ட நுரையீரல் குணமாக அதிக காலமாகும் எனவும் இரண்டு முதல் நான்கு விழுக்காட்டினர் குணமாக்க முடியாத நிலையில் நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.

புற்றுநோய் உள்ளதா என்பதைக் கண்டறியவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளவும் புதிதாக சிடி ஸ்கேன் எடுக்கப்படுகிறது .மருத்துவர்கள் முதன்முதலாக பாதிப்பை கண்டறிந்து குணப்படுத்துவதற்காக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளார்.


Leave a Reply