கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி : நீட் தேர்வும் ஒத்திவைப்பு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக மே 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நீட் நுழைவுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் முன் கூட்டியே மூடப்பட்டுள்ளன. பிளஸ் டூ தவிர்த்து அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் முடங்கியுள்ளது.

 

இந்நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் மே 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்த நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.


Leave a Reply