இளவரசர் சார்லஸை தொடர்ந்து பிரிட்டன் பிரதமருக்கும் கொரோனா தொற்று உறுதி!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா அறிகுறி உறுதி செய்யப்பட்டுள்ளது. இளவரசர் சார்லஸ் கொரானோ தொற்று காரணமாக தம்மை தனிமைப்படுத்திய நிலையில், பிரிட்டனில் கொரோனா வைரஸ் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.

 

கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளின் தலைவர்கள் பலரையும் அச்சத்தில் ஆழ்த்தி அவர்களை தனிமைப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் பலவும் தற்போது கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி அலறுகின்றன. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஹாலந்து ஆகிய நாடுகளில் மட்டும் இந்த வைரஸ் தாக்குலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளன.

 

இதில் இத்தாலியும், ஸ்பெயினும் தான் மீள வழி தெரியாமல் திண்டாடி வருகின்றன. பிரிட்டனிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பிரிட்டன் இளவரசர் 71 வயதான சார்லசுக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டு தம்மை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் இன்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட போரிஸ் ஜான்சன், தமக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி காரணமாக சோதனை நடத்தியதில் லேசான கொரோனா அறிகுறி உறுதியாகியுள்ளது. இதனால் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், ஆனாலும் கொரானேவுக்கு எதிரான இந்தப் போரில், வீட்டில் இருந்தே வீடியோ கான்பரன்ஸ் மூலம் நாட்டை வழி நடத்துவேன் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மற்றொரு ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலோ மெர்கல், சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Leave a Reply