ஊரடங்கு உத்தரவு மீறல் ! வெளியே சுற்றியவர்களை லத்தியால் அடித்து விரட்டும் போலீசார்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களை காவல்துறையினர் லத்தியால் அடித்து விரட்டினர்.கொரொனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் சிலர் அரசு உத்தரவை மீறி வீட்டில் தங்காமல் வெளியில் சுற்றி வருகின்றனர். சத்திரப்பட்டியில் இருசக்கர வாகனங்களில் உலா வந்தவர்களை போலீசார் பலமுறை எச்சரித்துள்ளனர்.ஆனால் அவற்றைக் கண்டுகொள்ளாமல் வாகனங்களில் சுற்றித்திரிந்த அவர்களை போலீசார் லத்தியால் அடித்து விரட்டினர்.


Leave a Reply