--- --:--:-- --

144 தடை உத்தரவால் எளிமையாக நடைபெறும் திருமணங்கள்!

1

கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் எளிய முறையில் திருமண விழாக்கள் அரங்கேறின.

 

மதுரை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கும், ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வெள்ளகோவில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்று இந்த திருமணத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினிகள் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

 

ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்கதன் பகுதியை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கும் மங்கலத்தைச் சேர்ந்த கண்மணி திருமணம் நடந்தது. ராமநாதபுரம் புது பேருந்து நிலையம் அருகே உள்ள முருகன் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் சாலை ஓரத்திலேயே இந்த திருமணம் அரங்கேறியது. மணமகன் மணமகள் வீட்டை சேர்ந்த ஐந்து பேர் மட்டுமே பங்கேற்றனர்.

 

சிவகங்கையை சேர்ந்த கோகிலா என்பவருக்கும் சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கும் மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கொரொனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த நிலையில் திருமண மண்டபம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து சிவகங்கையில் அமைந்துள்ள சிவன் கோவிலில் நெருங்கிய உறவினர்களின் முன்னிலையில் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.

 

சென்னை எடுத்தக் ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கானாத்தூர் பகுதியை சேர்ந்த கோமளா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. மணமகன் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் திருமணம் அரங்கேறியது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon