தனியார் பால் விற்பனை நேரம் அதிரடியாக குறைப்பு
தமிழகத்தில் நாளை முதல் அதிகாலை 3.30 மணியிலிருந்து காலை 9 மணி வரை மட்டுமே தனியார் பால் விற்கப்படும் என்று பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
சங்க நிறுவனரும் மாநில தலைவருமான பொன்னுசாமி வெளியிட்ட அறிவிப்பில் கொரொனா விவகாரத்தில் பொதுமக்களில் அஜாக்கிரதை மெத்தனத்தால் பால் முகவர்கள் காவல்துறை நடவடிக்கைக்கு ஆளாகி பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதலால் சில்லரை கடைகளுக்கு தனியார் பால் வினியோகம் செய்வதில்லை என்றும் முகவர்களின் கடைகளில் மட்டும் பால் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் பால் 100 ரூபாய்க்கு மேல் சமூகவிரோதிகள் சிலரால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருவதாகவும்அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.






