--- --:--:-- --

சீசன்தோறும் பரவக்கூடியதாக கொரோனா மாறுமா? தடுப்பு மருந்து,எதிர்ப்பு மருந்து அவசியம்!

4

குறிப்பிட்ட சீசன் தோறும் பரவ கூடியதாக கொரொனா வைரஸ் மாறலாம் என்பதால் தடுப்பு மருந்தையும், எதிர்ப்பு மருந்து கண்டறிய வேண்டிய அவசிய தேவை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியின் தென் கோளார்த்தத்தில் குளிர்காலத்தில் வேர் ஊன்றிய வைரஸ் பாதிப்பு குளிர்காலத்தை கடந்துசெல்லும்.

 

குளிர்காலத்தை எதிர்நோக்கும் நாடுகளில் அதிகரித்து இருப்பதாக அமெரிக்க தேசிய சுகாதார ஆய்வு நிறுவனத்தில் தொற்று நோய்கள் ஆய்வுகளுக்கு தலைமைதாங்கும் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

 

மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விட்டாலும் கூட மீண்டும் மறுசுழற்சி முறையில் வந்து விடாமல் இருப்பதற்கான தயாரிப்பும் அவசியம் எனவே தடுப்பு மருந்தை விரைவாக உருவாக்கி சோதித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

 

தற்போது சீனாவிலும், அமெரிக்காவிலும் தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீது பரிசோதிக்கப்பட்டு வரும் நிலையில் பயன்பாட்டுக்கு வர ஓர் ஆண்டு அல்லது ஒன்றரை ஆண்டு ஆகலாம்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon