பெட்ரோல் பங்கில் கிரிக்கெட் விளையாடும் பணியாளர்கள்!
ஆந்திராவில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வாடிக்கையாளர்கள் வருகை குறைந்ததால் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியர்கள் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். அத்தியாவசிய கடைகளில் மக்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
விசாகப்பட்டினத்தில் பெட்ரோல் நிலையம் ஒன்றில் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்ததால் அங்குள்ள ஊழியர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்து வருகின்றனர். கொரொனா பரவும் சூழலில் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இப்படி கிரிக்கெட் விளையாடுவது ஆபத்தாகும்.






