மருத்துவக்கல்லூரியில் ட்ரோன் மூலம் தெளிக்கப்பட்ட கிருமி நாசினி
கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை மருத்துவ கல்லூரி முழுவதும் போன் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. கொரொனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் 8 மாவட்ட எல்லைகள் அடைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முழுவதும் ஆளில்லா விமானத்தின் மூலம் மருத்துவமனை முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரொனா வைரஸ் அறிகுறியுடன் 26 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 12 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






