கொரொனா அச்சத்தால் சிறைக்கு தீ வைத்த கைதிகள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா வைரஸ் பீதியால் அர்ஜெண்டினாவில் சிறையில் பெரும் கலவரம் வெடித்தது. தலைநகர் பியூனஸ் அயர்ஸ் அருகில் உள்ள பிளாரன்ஸ் நகரில் பயம் காரணமாகவும் தங்களை விடுதலை செய்யக் கோரியும் கைதிகள் பணியில் ஈடுபட்டனர்.

 

மேலும் அவர்கள் சிறையில் தீவைப்பு சம்பவங்களிலும் ஈடுபட்டனர். இதேபோல் வடகிழக்கு பகுதியில் உள்ள சான்டா ஃபே என்ற இடத்தில் உள்ள சிறையில் கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர்.

 

அப்போது ஏற்பட்ட மோதலில் ஏராளமானோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக இதேபோல் பிரேசில் கொலம்பியா உள்ளிட்ட நாடுகளிலும் சிறைகளில் கைதிகள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு பலர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply