ஊரடங்கை மீறியவர்களுக்கு நூதன தண்டனை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஊரடங்கு உத்தரவை மீறி செயல்படுபவர்களை உத்திரப்பிரதேசத்தில் வித்தியாசமான தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். விதிமுறைகளை மீறுபவர்களுக்கு தண்டால், தோப்புகரணம் போன்ற தண்டனைகளை காவல்துறையினர் வழங்கி வருகின்றனர். தஞ்சாவூரில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.

 

கொரொனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக 144 தடை உத்தரவு என்பதை பிறப்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் காலை முதல் தொடங்கியுள்ளன. அந்த கடைகளை காவல்துறையினர் வழக்கமாக தடியடி நடத்தி மூட செய்தனர்.

 

இந்த கடைகள் திறந்து இருப்பதால் மக்கள் கூட்டம் அதிகளவில் வருவதாக கூறி காவல்துறையினர் உடனடியாக அத்தியாவசிய பொருட்கள் கடைகளை தவிர அனைத்து கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என உத்தரவிட்டனர். சாலையின் செல்லக்கூடிய இருசக்கர வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி எச்சரிக்கும் வகையில் தங்களது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகளவு மக்கள் புழக்கம் இருந்தால் கொரொனா விரைந்து பரவுவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும் எனவும், உடனடியாக அனைத்து பொதுமக்களும் தங்களது வீட்டிலேயே இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

காவல்துறையினர் மற்றும் அரசாங்கத்தின் சொல் பேச்சை கேட்க வேண்டும் என கூறி உடனடியாக ஊரடங்கு உத்தரவை முழுவதும் அமல்படுத்த நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில் மதுரையில் தேவையற்ற பயணங்களை மேற்கொண்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் லாரியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


Leave a Reply