இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆனது…!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


இந்தியாவில் கொரோனா வைரஸ் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. 536 பேர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரொனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரொனா நோய்த்தொற்றின் காரணமாக ஏற்கனவே 9 பேர் உயிரிழந்த நிலையில் மும்பை மற்றும் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த தலா ஒருவர் உயிரிழந்தனர்.

 

மேலும் கொரொனா பாதிப்பால் நாடு முழுவதும் இதுவரை 536 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. தற்போது அந்த பாதிப்பு 562 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 95 பேரும், மகாராஷ்டிராவில் 89 பேரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

கர்நாடகாவில் 37 பேரும், தெலுங்கானாவில் 35 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Leave a Reply