ஊரடங்கு மீறல் : கையெடுத்து கும்பிட்ட காவலர்…காலில் விழுந்து பாராட்டிய இளைஞர்!
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே நடமாட வேண்டாம் என சென்னையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஒருவர் கையெடுத்து கும்பிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய நிலையில் அவரை பாராட்டி வாகன ஓட்டி ஒருவர் அவரது காலில் விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே சென்று கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் அண்ணா சாலையில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரான ரக்ஷித் என்பவர் வெளியே யாரும் நடமாட வேண்டாம் என்று கையெடுத்து கும்பிட்டு வாகன ஓட்டிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனை பார்த்த வாகன ஓட்டி ஒருவர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரின் செயலைப் பாராட்டி அவரின் காலில் விழுந்தார்.
சமூகங்களை அனைத்து மக்களும் பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து காவல் ஆய்வாளர் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தினார். மேலும் அத்தியாவசிய பணிக்காக செல்வதாக கூறுவோரிடம் முக கவசம் அணியுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.






