செல்லப்பிராணியால் கொரொனா வைரஸ் பாதிப்பு ஏற்படுமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் அச்சுறுத்தல் இல்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருக்கிறது.மனிதர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழிப்புணர்வு இருந்தாலும் வீட்டில் இருக்கும் செல்ல பிராணிகளால் வைரஸ் பரவும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

 

ஆனால் நிச்சயம் செல்லப்பிராணிகள் ஆபத்து இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள். நம் வீட்டின் அனைத்து சுப, துக்க நிகழ்வில் நம்மில் ஒருவர் போல் செல்லப்பிராணிகள் இருந்து வருகின்றனர். நாம் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் தருணத்தில் செல்லப் பிராணிகளையும் அரவணைக்க வேண்டிய தேவை இருக்கிறது. சென்னையில் இரண்டு லட்சம் செல்லப்பிராணிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன.

ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நேரத்தில் பல குடியிருப்பு சங்கம் பிராணிகள் இருக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து உள்ளன. உணவகங்கள் இல்லாமல் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் தெருவோரம் இருக்கும் பிராணிகளையும் கவனிக்க வேண்டும். இதற்கு மாநகராட்சி தரப்பில் முயற்சி எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.


Leave a Reply