“கொரானாவுக்கு எதிரான போர்!!” 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு..! வீட்டை விட்டு வெளியில் வரத்தடை!! பிரதமர் மோடி உத்தரவு!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரை நிகழ்த்தினார். அந்த உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

கொரோனா பாதிப்புக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் மக்கள் ஊரடங்கில் ஒன்றாக திரண்டு மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள்.மக்கள் ஊரடங்கில் பங்கேற்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். கொரோனாவை எதிர்கொள்ள சமூக இடைவெளி ஒன்றே ஒரே ஒரு வாய்ப்பாக உள்ளது. ஒருவருக்கொருவர் விலகி இருந்து வீடுகளில் தங்கி இருப்பதை தவிர வேறு வழியில்லை.

 

கொரோனா பாதித்தவர்கள் மட்டும் தான் தனித்து இருக்க வேண்டும் என்று எண்ணவேண்டாம்.வல்லரசு நாடுகளே கொரோனா வைரஸ் பாதிப்பால் நிர்கதியாகி நிற்கின்றன. எனவே கொரோனா சங்கிலித் தொடரை உடைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதனால் இன்று இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 21 நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும்.

 

ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு யூனியன் பிரதேசமும் எனவே நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ஊரடங்கு .
இந்த ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பொருளாதார பாதிப்பை விட மக்களின் உயிர் தான் முக்கியம்.மக்கள் ஊரடங்கை காட்டிலும் இது கடுமையான ஊரடங்கு . மக்களையும் காப்பாற்றவே இந்த முடிவு . தேசத்தையும் மக்களையும் காப்பாற்றவே இந்த முடிவு .

ஒவ்வொரு மாநிலமும், நகரங்களும், கிராமங்களும் இதன்மூலம் முடக்கப்படுகின்றன. எது நடந்தாலும் வீட்டிலேயே இருக்க வேண்டும்.வெளியில் நடமாடுகிறீர்கள் என்றால் கொரோனாவை வீட்டுக்குள் கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம் .கொரோனாவுக்கு எதிராக மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்டோர் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். துப்புரவு பணியாளர்கள் , காவல்துறையினர், ஊடகத்துறையினரின் அயராத உழைப்பை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு நாம் வீட்டிலிருந்து நன்றி தெரிவிப்போம். இந்த அளப்பறிய சேவையில் ஈடுபட்டுள்ளவர்க ஒக்கு வீட்டில் இருந்தபடி பிரார்த்தனை செய்யுங்கள்.

 

மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. கொரோனா
தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு ரூபாய் 15,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. பேரிடர்களில் இருந்து இந்தியா எப்படி தற்காத்து கொள்கிறது என்பதை காட்ட வேண்டிய தருணம் இது. நாட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் வீட்டுக்குள் இருங்கள்; வெளியில் வரவேண்டாம் என பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த ஊரடங்கு உத்தரவால் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒட்டு மொத்த தேசமும் வீட்டிற்குள் பதுங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


Leave a Reply