கொரனாவிலிருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டோர்க்கு பொதுமக்கள் கை தட்டியும்,காவல் துறையினர் சைரன் ஒலித்தும் பாராட்டு !!!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரனாவிலிருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டோர்க்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக கோவையில் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் கை தட்டியும்,காவல் துறையினர் சைரன் ஒலித்தும் பாராட்டு !!!

 

இந்தியா முழுவதும் இன்று சுய ஊரடங்கு நடைபெற்று வருகிறது இதில் பங்கேற்கும் பொதுமக்கள் மாலை 5 மணி அளவில் தங்களது வாயில்களில் வந்து நின்று கொரானா பாதிப்பில் இருந்து பொதுமக்களை மீட்க தங்களை ஈடுபடுத்தி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வருவாய்த்துறையினர், காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர், இராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாலை 5 மணியிலிருந்து கைகளைத் தட்டி அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து கோவை இடையர்பாளையம் பகுதியில் வசிக்கும் அந்தணர் முன்னேற்ற கழகத்தினர் தங்கள் வீட்டின் வாயிலின் முன்பு நின்று கைகளை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தனர்.

மேலும்,உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது குடும்பத்தினருடன் கைகளை தட்டி பாராட்டுக்களை தெரிவித்தார்.காவல் துறையிரும் மாலை 5 மணியளவில் சைரன் ஒலிக்க விட்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.இதில் கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்று வீட்டில் இருந்தபடியே கரகோசத்தை எழுப்பினர்.


Leave a Reply