முகக்கவசம், சானிடைசரை அதிக விலைக்கு விற்றால் குண்டாஸ் பாயும்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


முக கவசம், சனிடைசர் உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு பொருட்களை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரொனா தொடங்கியது முதலே முக கவசம், சனிடைசர் உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகளவில் வாங்க தொடங்கினர்.

 

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில விற்பனையாளர்கள் சனிடைசர், முகமூடியை பல மடங்கு விலை ஏற்றி விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதனை அரசு கடுமையாக எச்சரித்த தோடு மக்களை இலவச தொலைபேசி எண், மின்னஞ்சல், முகவரி, செயலி ஆகியவை மூலம் புகாரளிக்கவும் அறிவுறுத்தியது.

 

இந்த நிலையில் முக கவசம் , சானிடைசர் ஆகியவற்றை அதிகபட்ச சில்லரை விற்பனைக்கு மேல் விற்றால் அதிக நடவடிக்கையாக குண்டர் சட்டம் பாயும் என அரசு எச்சரித்துள்ளது.


Leave a Reply