ஈரோடு மாவட்டத்தை முடக்க காரணம்! ட்விட்டரில் பதிவிட்ட விஜயபாஸ்கர்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஈரோடு மாவட்டத்தை முடக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்தது ஏன் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார். கொரொனா பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்தது.

இதில் ஈரோடு மாவட்டத்தை ஏன் முடக்க வேண்டும் எனபலரும் கேள்வி எழுப்பியதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர் தாய்லாந்தில் இருந்து வந்த 2 பேர் ஈரோட்டில் தங்கியிருந்தபோது அவர்களுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, தமிழகத்தில் கொரொனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட மாவட்டங்களில் சென்னை, காஞ்சிபுரத்தோடு ஈரோடு இருப்பதால் 3 மாவட்டங்களை முடக்க வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply