ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை..!
சென்னையில் உள்ள அனைத்து ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து லேப்டாப் வழங்கும் பணி சாப்ட்வேர் பதிவேற்றம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் ஆயிரத்து 800 ஐடி நிறுவனங்கள் உள்ளன. அதில் மொத்தமாக 6 லட்சத்திற்கும் மேலான பொறியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஐடி நிறுவனங்கள் அமைந்திருக்கக் கூடிய பகுதிகளில் சிறப்பு மண்டலம் என்று மத்திய வணிக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் அறிவிக்கப்பட்ட செயல்படுகிறது.
இதுபோன்ற ஐடி நிறுவனங்கள் பேரிடர் நேரங்களில் அவர்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு இம்மாதிரியான நிலையை அறிவிப்பார்கள். தற்பொழுது கொரொனா பாதிப்பின் காரணமாக ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.






