ஊரடங்கு உத்தரவை முழுமையாக செயல்படுத்த மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தல்

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


மேலும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கொரொனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 81 மாவட்டங்களை முடக்க மாநில அரசுகளை மத்திய அரசு அறிவித்து இருந்தது.

 

அதைப்போல தனிமைப்படுத்தப்பட்ட நபர் ஒரு வீட்டிற்குள்ளேயே இருப்பதை உறுதி செய்யவும் நோய் பரவாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளை எடுக்கவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் மக்கள் வழக்கம்போல அன்றாட பணிகளில் ஈடுபட்டு ஊரடங்கு உத்தரவை முழுமையாக பின்பற்றவில்லை என பிரதமர் மோடி கவலை தெரிவித்திருந்தார்.

 

இந்தநிலையில் விதிமுறைகளை கடுமையாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரொனா முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மக்கள் உரிய அக்கறையுடன் பின்பற்றவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Leave a Reply