--- --:--:-- --

9 ஆயிரம் பேருக்கு கொரொனா பாதிப்பு! குறைந்த மருத்துவ வசதி! தென் கொரியா மீண்டது எப்படி?

10

கொரொனா தாக்கிய இரண்டு காலங்களில் தென்கொரியாவுக்கு போதிய மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை வசதிகளோ இல்லாத சூழ்நிலையில் அந்நாடு நிலைமையை சமாளித்து வருகிறது. மக்கள் கொத்தாக செத்து விழும் ஒரு இக்கட்டான சூழலில் மருத்துவமனை படுக்கைகள் கொரொனாவுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டன.

 

அந்த நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் உதவியை நாடிய அரசு நோயாளிகளை நான்கு பிரிவுகளாக பிரித்து மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இளம் வயதினர், உடல் ஆரோக்கிய மிக்கவர்களுக்கு சாம்சங், லைப் இன்சூரன்ஸ் போன்ற நிறுவனங்கள் அளித்த தங்குமிடங்களில் wi-fi, தொலைக்காட்சி வசதிகளுடன் தங்க வைத்தது.

 

அந்த நாட்டில் 9 ஆயிரம் பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், 104 பேர் உயிரிழந்தனர்.

 

தற்போது நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் தென்கொரியா குறைந்த வசதிகளையும் வைத்து எவ்வாறு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது என்பதற்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon