--- --:--:-- --

தனது வீடியோவை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியது ஏன்?

22

கொரொனா தொடர்பான ஊரடங்கு குறித்து தான் வெளியிட்ட வீடியோவை ட்விட்டர் நிறுவனம் தவறாக புரிந்துகொண்டு நீக்கிவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அவர் 14 மணிநேரம் மக்கள் வெளியில் நடமாட இருந்தாலே கொரொனாவை தடுத்துவிட முடியும் என தான் வீடியோவில் சொன்னதை சிலர் தவறாக புரிந்து கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

 

14 மணி நேரம் மட்டுமல்லாது அரசு பரிந்துரைக்கும் காலம் வரை சுய தனிமைப்படுத்துதல் மேற்கொண்டு வீழ்த்த வேண்டும் என விளக்கம் அளித்துள்ள ரஜினி தான் வெளியிட்ட வீடியோவில் நோக்கத்தை புரிந்துகொண்டு மக்களிடம் கொண்டு சேர்த்தவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon