கொரோனா தடுப்பு நடவடிக்கை : மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

Publish by: செய்திப் பிரிவு --- Photo : Arrangement


கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது.கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் இதுவரை 206 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாகவும்,5 பேர் பலியாகியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில  முதல்வர்களுடன் பிரதமர் மோடி, இன்று மாலை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

 

இந்த, ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் இருந்தபடி பங்கேற்றனர்.
இந்த ஆலோசனையில், கரோனா பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய தடுப்பு நடவடிகைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

கொரோனா தொடர்பாக நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, நாளை மறுதினம் (22-ந் தேதி) இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்க அழைப்பு விடுத்திருந்தார். இந்த மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக செயல்படுத்துவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்திய நிலையில், இன்று மாநில முதல்வர்களுடன் நடத்திய இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


Leave a Reply