கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகள் அனைத்தும் நாளை முதல் மூடல்..! தமிழக அரசு அதிரடி முடிவு!!

Publish by: கோவை விஜயகுமார் --- Photo :


கேரளா, கர்நாடக, ஆந்திரப் பிரதேச மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் அனைத்தும் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா முன்னெச்கரிக்கை நடவடிக்கையாகவும், வைரஸ் தொற்று பரவலை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.வெளி மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தது.

 

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து பிற மாநிலங்களின் எல்லைகளையும் மூடும் முடிவை தமிழக அரசு எடுத்துள்ளது.இது தொடர்பான தமிழக வெளியிட்டுள்ள அறிவிப்பில், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் நாளை முதல் 31-ந் தேதி மூடப்படுகிறது. பால், பெட்ரோல், டீசல் காய்கறிகள், மருந்துகள், கேஸ் சிலிண்டர் ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டும் அனுமதிக்கப்படும். இறப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்களுக்கும் அனுமதி உண்டு.

 

அத்தியாவசிய தேவைக்கு மட்டும் குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இயக்கப்படும். பேருந்துகள் மற்றும் வாகனங்களில் வருவோர் அனைவரும் நோய் தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். வாகனங்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதன் மூலம் அரசு அனுமதித்த வாகனங்கள் தவிர்த்து வேறு எந்த வாகனங்களும் தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு செல்லவோ, தமிழகத்திற்குள் நுழையவோ தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடியுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்தப்பட்ட ஆலோசனை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, 9 அம்ச திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளதாகவும் , அதனை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Leave a Reply