நடிகை திரிஷாவின் கொரோனா விழிப்புணர்வு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா தொற்று ஏற்படாமல் தடுக்க செய்ய வேண்டிய சுயமுன்னேற்ற வகைகள் குறித்து நடிகை திரிஷாவின் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒவ்வொரு தனிநபரும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து நடிகை திரிஷா விளக்கிக் கூறுகிறார்.

 

அதில் தமிழக அரசின் ஹெல்ப்லைன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, இருமல் வந்தாலோ அல்லது தும்மல் வந்தாலோ உடனே கர்சீஃப் அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும் என்றும், பயன்படுத்திய டிஷ்யூ பேப்பரை மூடி போட்ட குப்பை தொட்டியில் போட்டு மூடவேண்டும் என்றும் கண், காது, மூக்கு, வாயை தேவையில்லாமல் தொடக் கூடாது எனவும் அடிக்கடி 20 வினாடிகள் சோப்பு போட்டு கை கழுவ வேண்டும் என கூறியுள்ளார்.

 

கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், இருமலும், காய்ச்சலும் வந்தாலோ அல்லது மூச்சு விடுவதற்கு கடினமாக இருந்தாலும் மற்றவர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளார்.


Leave a Reply