அரசு அறிவிப்பை மீறி ஸ்பெஷல் க்ளாஸ்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் அரசு அறிவுறுத்தலை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்திய பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தனியார் பள்ளிகளில் வழக்கம்போல மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப் படுவதாக புகார் எழுந்தது.

 

இதனை அடுத்து பழனி சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது தெரியவந்ததையடுத்து அனைத்து மாணவர்களும் வீட்டிற்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

 

இதேபோல் மதுரை அருகே உள்ள ஆரப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் பள்ளியில் உள்ள அனைத்து மாணவ மாணவிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.


Leave a Reply