நிர்பயா வழக்கு குற்றவாளி அக்ஷயின் மனைவி குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவராக அக்ஷய் தாகூரின் மனைவி தான் விதவையாக இருக்க விரும்பவில்லை என்றும் விவாகரத்து வேண்டுமென நீதிமன்றத்தை நாடியுள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20-ஆம் தேதி காலை 5.30 மணி அளவில் தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது .

 

இந்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய தாகூரின் மனைவி புனிதா தேவி என்பவர் பிஹாரில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் குடும்ப நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஒரு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் விதவை மனைவி என்ற பெயரோடு வாழ விரும்பவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

நிர்பயா வழக்கில் தனது கணவர் ஒன்றும் அறியாதவர் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர் என தவறாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றும் சமீப காலம் வரை அக்ஷயின் மனைவி கூறி வந்த நிலையில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.


Leave a Reply