இது கொரொனா அல்ல..கர்மா! பதிவிட்ட கிரண்பேடி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


அசைவ உணவு பழக்கத்தின் விளைவாக உருவான கொரொனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடும் வகையிலான கேலிச்சித்திரத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸப்பில் பதிவிட்டுள்ளார். இதில் மனிதர்கள் முக கவசம் அணிந்து கூண்டிற்குள் நிற்க விலங்குகள் சுதந்திரமாக சுற்றி நின்று வேடிக்கை பார்ப்பது போல் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

இது கொரொனா அல்ல கர்மா என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அகிம்சையை வார்த்தையில் மட்டுமல்லாமல் செயலிலும் உணவுப் பழக்கத்திலும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார்.


Leave a Reply