கேஸ் சிலிண்டர் ஏற்றி சென்ற வாகனத்தில் பயங்கர தீ விபத்து

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கிருஷ்ணகிரி அரசு நத்தத்தில் உள்ள தனியார் குடோனில் இருந்து தொழிற்சாலையை பயன்பாட்டுக்கான சுமார் 450 கிலோ எடைகொண்ட கேஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு ஓசூர் நோக்கி சென்று இருந்த மினி லாரி வேகத்தடையில் ஏறி இறங்கிய போது அதிலிருந்து சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இதையடுத்து சிலிண்டரில் பற்றிய தீ லாரியில் பிடித்து மளமளவென எரிய துவங்கியது. ஓட்டுனர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்கி தப்பிய நிலையில் தீ அருகில் இருந்த கடைகள் மற்றும் வாகனங்களுக்கும் பரவியது.

 

இதில் இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களுக்கும், 12க்கும் மேற்பட்ட கடைகளுக்கும் கொழுந்துவிட்டு எரிந்து நாசமாகின. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆங்காங்கு எரிந்து கொண்டிருந்த தீயை நீண்ட முயற்சிக்குப் பிறகு அணைத்தனர்.

 

இதில் பெண் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Reply