காரை விட மாட்டு வண்டியை ஓட்டிச்சென்ற போது பெருமகிழ்ச்சி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


காரில் பயணம் செய்வதைவிட மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்த அவர் விவசாயக் குடும்பத்தில் பிறந்ததால் விவசாயிகளின் இன்னல்களை உணர்ந்து அவர்களுக்கான சேவைகளை உளமாற செய்வதாக கூறினார்.

 

திருவாரூரில் விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டு வண்டியை ஓட்டிச் சென்ற போது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்றும் அவர் தெரிவித்தார். டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மசோதாவில் தாக்கல் செய்து நிறைவேற்றியதை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுவதாக அவர் கூறினார்.


Leave a Reply