ரயில்வே நடைமேடை டிக்கெட்களின் விலை உயர்வு

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலைய பிளாட்பார டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதன் விற்பனை குறைந்துள்ளது. கொரொனா பாதிப்பை தடுப்பதற்காக மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

 

அதன்படி ரயில்களில் பயணிகளை வழியனுப்பவும், வரவேற்கவும் வருவோரின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பிளாட்பார டிக்கெட் கட்டணம் 10 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக சென்னை மத்திய ரயில் நிலையம் எழும்பூர் தாம்பரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் 20 சதவீதம் அளவிற்கு பிளாட்பார டிக்கெட் விலை குறைந்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply