கொரோனா அறிகுறி! மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


டெல்லியில் கொரோனா பாதிப்பு என்ற சந்தேகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய 35 வயது இளைஞர் ஒருவருக்கு கொரொனா அறிகுறிகள் இருந்ததால் அவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ஏழாவது மாடியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்நிலையில் நேற்று இரவு அவர் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பஞ்சாபின் பகத் சிங் நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் கடந்த ஒரு வருடமாக ஆஸ்திரேலியாவில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

 

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு கொரொனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply