--- --:--:-- --

கொரொனா அச்சம்! கோழிக்கறி வியாபாரிகள் விழிப்புணர்வு!

17

சிக்கன் உண்பதால் கொரொனா தொற்று ஏற்படாது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நூதன முறை கையாளப்பட்டு வருகிறது. கோழிக்கறி உட்கொண்டால் கொரோனா வைரஸ் தாக்கும் என சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக தகவல் பரவின.

 

இதனால் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. கோழி உண்பதால் எந்த பாதிப்பும் வராது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சேர்ந்த கோழிக்கறி வியாபாரிகள் 200 கிலோ சிக்கனை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.

 

இதேபோல் மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் ஒருவர் கொரொனா எதிர்ப்பு என்ற பெயரில் சிக்கன் விற்பனையை செய்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon