பால், மளிகை கடைகள் மூடப்படும் என்று வதந்தி பரப்பினால் நடவடிக்கை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னையில் பால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் மூடப்படும் என்ற வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக அரசின் உத்தரவின்படி நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை விடுதிகள், விளையாட்டு அரங்கங்கள், மதுக்கூடங்கள் ஆகியவற்றை மூட ஆணையிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பால், மளிகை மற்றும் காய்கறி கடைகள் மூடப்படும் என பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.


Leave a Reply