முகமூடி எல்லாரும் அணிய வேண்டும் என்பது அவசியமா?

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா அச்சத்தால் எல்லோரும் முகமூடி அணிய தேவையில்லை என்றும் குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் மட்டுமே முகமூடி அணிய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. கொரொனா பாதிப்போ, அறிகுறியோ இல்லாமலேயே அதன்மீதான அச்சத்தால் மக்கள் முகமூடி அணிந்து கொண்டு செல்வதைப் பலரும் பரவலாக காணமுடிகிறது.

 

இந்நிலையில் ட்விட்டர் பக்கத்தில் மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள விளக்கப் படத்தில் எல்லோரும் முகமூடி அணிய தேவையில்லை எனவும் இருமல், காய்ச்சல் அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே முகமூடி அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கொரொனா நோயாளிகளை கவனிப்போரும், சுவாச பிரச்சனைகள் கொண்ட நோயாளிகளைக் கவனிக்கும் சுகாதார ஊழியர்களும் முகமூடி அணிய வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.


Leave a Reply