சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கொரொனா முன்னெச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை சில பள்ளிகள் நடத்துவதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறப்பு வகுப்புகளை நடத்துவது அரசு பள்ளியாக இருந்தாலும், தனியார் பள்ளியாக இருந்தாலும் பொதுசுகாதார சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

 

கொரொனா பரவாமல் தடுப்பதற்காக ஒரு மார்ச் 31-ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகளை தவிர மற்ற வகுப்புகள் நடைபெற கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply