முன்விரோதம் காரணமாக கத்திக்குத்து சி‌சி‌டி‌வி காட்சிகள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் முன்விரோதம் காரணமாக அந்தோணியார் ஆலய பங்கு பேரவை செயலாளர் மர்ம நபர்களால் கத்திக்குத்துக்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

வில்லியம் என்ற அந்த நபருக்கும் முன்னாள் பங்கு பேரவை செயலாளராக இருந்த வில்லியம் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ஆம் தேதி வீட்டில் இருந்த வள்ளியம்மை என்பவருக்கு தெரிந்த நபர் ஒருவர் மூலமாக கடை பகுதிக்கு வரவழைத்து 9 பேர் கொண்ட கும்பல் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளது.

 

அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டதால் தாக்குதல் நடத்திய கும்பல் தப்பியோடிய நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply